Thursday, September 8, 2011

நான் விரும்பும் நண்பர்கள்!





நாக்கும் வாக்கும் ஒன்றெனெக் காட்டும்
நண்பர்கள் யாவரும் வருக;
நோக்கம் சமூக மாற்றம் என்பதில்
நுகர்வோர் மட்டும் இணைக!

தத்துப் பித்தெனப் பேச்சும் கருத்தும்
தருவோர் இதனை அறிக;
சித்தம் முற்றும் தெளிந்திடும் வரையில்
சிந்தித் திருந்து விலக!

சிறுமைக் குணமும் சினிமாத் தனமும்
சிந்தனை யற்ற பதிப்பும்
அறிவை இங்கு கெடுத்து உங்கள்
அளவைக் கீழே அழுத்தும்!

அன்னைத் தமிழின் அணிகலன் என்று
அவரவர் தங்கள் எழுத்தை
நன்றெனக் காட்டிப் பதிக்கும் நல்ல
நண்பர்கள் இங்கே  இணைக!

அன்புடன்,
கிருஷ்ணன் பாலா
8.9.2011