Thursday, May 31, 2012

கேளிர்,ஒரு சொல் கேளீர்,










உண்மைதானே!
ஊர் பற்றி எரிந்தாலும் கவலையின்றி
உறங்கிடுவோர் ஒரு கோடி ஆனாலும்
சீர்கெட்ட மதியுடையோர் அவரை விட்டுச்
சிந்திப்போம்; சிலருக்கே;நமது எண்ணம்
வேர்பற்றி எழுகின்ற ஆலம் போல,
விழுதூன்றும்;நல்லோரின் நெஞ்சிலிங்கு;
ஓரிருவர் என்றாலும் அவர்பொருட்டே
உலகிடையே எழுதுகின்றோம்;உண்மைதானே!

குரு வழி ஒரு மொழி

ஊர்சொல்லி நின்று உரைத்த பொருள் அன்று;
பேர்கொள்ள வேண்டிப் பிதற்றும் மொழி அன்று;
சீர்கொண்டு நின்று செபித் ததுவும் அன்று:
நேர்கொண்ட நெஞ்சின் நிமலனருட் சொல்லே!
                                                               (எனது தெரு மந்திரம்:8)

மூடர் சபையின் முட்டாள்
முகம் மறைத்துப் பேசும் மூடர்கள் நடுவே
முகம் காட்டி நிற்கின்ற முட்டாளாய் நானே
முகவுரைத்தேன்;முன் நின்றேன்;என் அகத்தின்
முகம் காணாப் பேர்வழிகள் முனகு மாறே!
                                                    (எனது தெரு மந்திரம்:9)

 KB/31.5.2012

No comments: