Sunday, October 23, 2011

இது,’என்’ கணிதம்!











வேடம் தாங்கல் போலே;இங்கு
விரும்பி வருவோர் பலரிருக்க
தாகம் தீர்க்க மட்டும்; அவர்
‘தங்கப் பலகை யாய் வைத்தேன்!
வேகம் கொண்டு சிலர்,இங்கு
வி-வாதம் செய்ய வரும்போது
மோதல் கொண்டு எழுதுவதை
சாடல் என்று கருதாதீர்;இது
‘சங்கப் பலகைஆம்;அறிவீர்!


சிலர் வருவார்;சிலர் போவார்;
சிந்தனை அவர்க்கு கிடையாது;
சிலர் சினப்பார்;சிலர் உவப்பார்
செப்புதல் அவர்க்குக் கிடையாது;
சிலர்  சினப்பதில் மட்டும் இருப்பார்;
சிந்தை அவர்க்குக் கிடையாது;
சிலரில் சிலரே செப்புதல் கலந்து
சிந்தனை செழிக்க வைக்கின்றார்!

குட்டுதல் மட்டும் செய்தால்;அது
குறைகளையாது; செப்பும்!
சுட்டுதலின்றிக் குட்டுதல் மட்டும்
செய்தால்;பெருமை தப்பும்!
எட்டுக்கு மேலே ஒன்பது என்பது
இயற்கைக் கணிதம் ஆகும்;இது
எட்டுக்குக் கீழே ஒன்பதை எழுதும்
என் கணிதம்தான் பாரும்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
23.10.2011

2 comments:

V.Rajalakshmi said...
This comment has been removed by the author.
V.Rajalakshmi said...
This comment has been removed by the author.