Wednesday, November 3, 2010

திருமந்திரம் போற்றுமின்…….

தெளிவுடை மாந்தருக்குறும்பே ரின்பம்;
தெளிவுடை மாந்தருக்கொருநன் னூலது;
தெளிவுடை மூலர் மந்திரம் போற்றின்;
தெளிவுடை யதுபோல் பிறிதொன் றிலையே!

-கிருஷ்ணன் பாலா
2.11.2010 /14:10 pm



படம் உதவி:யமுனேஸ்வரி ஆறுமுகம்

1 comment:

ulagathamizharmaiyam said...

நன்றி,திரு.துளசி தாசன்....

Tulasi Thasanதுளசிதாசன்:முக நூலில் எழுதி அனுப்பியவாறு:) ஓம் நமசிவாய
திருமந்திரம் சிவமந்திரம்
ஓம் சிவாயநம:

அன்பிற்குரிய அய்யா அவர்களுக்கு
.அன்பான வணக்கங்கள்...

பாலும் பாகும் பருப்பும் தேனோடு
கலந்து உண்டால்,
எப்படி தித்தித்து இனிக்குமோ,
இனியதற்கு இனிய நம் தமிழ் ஞான சான்றோர்கள் அருளிய
வாசகங்களை நெக்குருகி நெகிழ்ந்து
உணர்ந்து தெளிந்து அகத்தில் தவழவிட்டால்,
உவட்டாமல் இனித்து
தித்தித்து விளையாடும் தெய்வீகத் தமிழ்.

கற்றாரைக் கற்றார் காமுற்றோம்..
காமுற்ற காரணம்
கார்மேகம் கண்டறிந்தான்.

பதித்தவர் அறிவார்
பதித்தவன் அறிவான்.

அகம் களித்தோம்......

உயர்ந்த நட்பு;
தெளிந்த நட்பில் உறவாடுதல்
இனிதிலும் இனிது.

தாங்கள் பதித்தது,
நா உச்சரித்து சுவைத்தது;
இனித்தது!

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

ஓம் சிவாயநம ஓம்