பிரேமநாயகம் -ஆவுடை நாயகி தம்பதிக்குப் பூங்கொத்து வழங்கும் நண்பர் திரு.கார்த்திக். |
பொய் தகர்த்த எண்ணம்;
பொன் நிகர்த்த உள்ளம்;
மெய்வழி யில் நின்று
மேவி வாழும் கொள்கை!
தன் மனத்தை வென்று
தர்ம நெறி கண்டு;
பன்ம தங்கள் அறிவைப்
பதித்து வாழும் மனிதன்!
பிரேமநா யகத் தைப்
பேசுகின் றேன் இங்கே;
உரிமை கொண்ட நட்பில்
உவந்து வாழ்த்து கின்றேன்!
என்ம னத்தை ஈர்த்து
புன்ன கைத்து வாழும்
ஆவுடைநா யகியை
அன்புத்துணை ஆக்கி;
மேவுகின்ற வாழ்வில்
மீட்டும் நல்லறத்தில்
இன்று ஆன காலம்
இருபத் தெட்டு ஆண்டு;
என்றும் அதன் பெருமை
இருக்க வேண்டி வாழ்த்து!
சொத்து சுகம் தேட
சூழ்ச்சி செய்த தில்லை;
எத்தனை யோஇழந் தும்
இதயம் சோர்ந்த தில்லை!
துன்பம் என்ற ஒன்று
தோல்வி செய்த தில்லை;
இன்பம் வந்த போதும்
எறிகிக் குதித்த தில்லை!
ஞானம் மிக்க மனிதன்
நல்ல றிவுப் புனிதன்;
ஊனமற்ற உணர் வில்
ஓங்கி நிற்கும் அறிஞன்!
இல்ல றத்தை ஏற்று
இருபத் தெட்டு ஆண்டு;
நல்ல றத்தை நடத்தும்
நண்பர் நீடு வாழ்க!
வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
22.10.2013
No comments:
Post a Comment