Sunday, December 11, 2011

இன்று- பாரதிதோன்றிய நாள்!

இந்தியர் நெஞ்சில் எல்லாம்
இமயமாய்த் தமிழை ஏற்றி
சுந்தரக் கவிதை செய்து
சுதந்திர முழக்கம் செய்த
மந்திரக் கவிஞன்;எங்கள்
மாகவி பாரதி;உலகில்
வந்தநாள், இன்று அவனை
வணங்குவோம்:அவன் பேர் வாழ்க!




பாரதி போற்றி!பாரதி போற்றி!
பொய்யும் புளுகும் புனைந்தது உலகு
புரட்டும் திருட்டும் கலந்தது உறவு;
வையம் முழுவதும் தேடியலைந்தும்;
வாழ்வில் நேர்மை உள்ளோர் குறைவு!

கவிஞன் என்றால் பாரதிமட்டும்
கருத்தில் நிற்கக் காணு கின்றோம்;
புவியில் அவன்சொல் திறனறிந்து   
பூட்டிக் கொண்டு பேணு கின்றோம்!

செவியில் அறைந்து அவன் உரைத்த 
சிந்தனை யாவும் கொண்டிடு  வோம்;
அவையில் ஒன்று;மறைவில் ஒன்று
அறியார் நாமெனக் கண்டிடு வோம்!

பாரதி தன்னைப் படித்தோர்;நமது
பாரில் பைந் தமிழ்ச் சொந்தம்;
வாரீர்,அந்தப்  பாரதி உணர்வை
வணங்கிடு வோமே என்றும்!

இவண்-
கிருஷ்ணன் பாலா
11.12.2011

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ நன்றி ஐயா.