
வகை வகையாய்ச் சிந்திப்போம்;மானுடரைத்
தானளந்து, தரம்பிரித்து, தர்மம் நீதி
தவறாது கருத்துரைத்தும் இடித்தும் சொல்லி
ஆனவரை நன்மைசெய முயல்வோம்;நல்ல
அறிஞரெலாம் எம்சொந்தம் என்று கூறும்
தேனளந்த கவிதைகளைப் படைத்து இங்கு
தெவிட்டாத கருத்துக்கள் குவிப்போம் நாமே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
----------------------------------------------------------------------------------------------------------
அருமைத் தோழர்,பாவலர் திரு இராஜ.தியாகராஜன் அவர்களின் பக்கத்தில் பதித்த கருத்து.
-----------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment