
கனவுலகில் நான் புகுந்து
கற்பனையை வளர்த்திருந்து
நனவுலகாய் நம்புகிறேன்;பாரீர்;அதில்
நான்படைக்கும் கவிதைகளைக் காணீர்!
கற்றவர்கள் அருகிருக்க;
கல்லாதோர் கல்லெறிய;மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறார்;அந்த
மாயையிலும் மலைஎனவே நிமிர்கிறேன்!.
என் விருந்தை ஏப்பமிட்டு
இலைகளையும் நக்கி விட்டு
இன்னும் சோறுஇல்லையென்று சொல்கிறார்;
இந்த ஏழைகட்கு என்னசெய்ய வேண்டுமாம்?
சுற்றியுள்ளோர் ஆயிரமாய்ச்
சூழ்ந்திருந்த போதிலும்;என்சுற்றத்தினர் எங்கு என்று தேடினேன்;அட
சுற்றுமுற்றும் யாருமில்லை;விழிக்கிறேன்!
முகநூலில் அகம் புதைத்து
முழுமையாக இருப்பவர்க்கு பகருகின்றேன்;என் கனவை நன்றுதான்;
பாவம், நானும் நீங்களுமே ஒன்றுதான்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
15.10.2011
2 comments:
இந்த கவிதை புரியல...
இப்போது நல்லா புரிந்தது...
Post a Comment