
என்னைப் படைத்துலகை
எந்நாளும் காக்கின்ற
அன்னை
கலைவாணி
அடிமலரைப்
பணிகின்றேன்!
உண்மை,உயர் நோக்கம்
ஒருநாளும்
தளராததிண்மைமிகு நெஞ்சம்;
தெளிவான
தமிழ்த்தேடல்!
நேர்கொண்ட எழுத்துக்கள்
நிஜமான கருத்துக்கள்
யார் என்னை எதிர்த்தாலும்
எதிர் நிற்க முடியாது;
‘பார்
என்று பறை சாற்றும்
பைந்தமிழின்
வல்லோனாய்வார்த்தென்னை வைத்தாளை
வணங்குகிறேன் இந்நாளில்!
இவண்-
கிருஷ்ணன்பாலா6.10.2011 – விஜய தசமி நாள்
”
No comments:
Post a Comment